இந்தப் படத்தில் இடம்பெறும் சைக்கிள் சண்டை, சமீபத்தில் பெங்களூரில் படமாக்கப்பட்டது. ஸ்டன்ட் சில்வா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த லீ ஹான் யு இருவரும் சேர்ந்து அதைப் படமாக்கியுள்ளனர். தெற்காசியாவிலேயே நம்பர் 1 சைக்கிஸ் ஸ்டன்ட் மாஸ்டர் இந்த லீ ஹான் யு. இந்த சண்டையில், வீலிங் போன்ற காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் அதர்வா. அவரால் முடியாத சில படுபயங்கர காட்சிகளில், லீ ஹான் அதர்வாவுக்கு டூப் போட்டு நடித்துள்ளார். படத்தில் மூன்று நிமிடங்களே இடம்பெறும் இந்தக் காட்சியை, 5 நாட்களில் படமாக்கியிருக்கின்றனர்.