இசைஞானியின் இசை ஆணவத்தால் அழிகி்றதா?

திங்கள், 27 மே 2019 (19:30 IST)
தாலாட்டை தாய் பாடுவதற்கும் பிறர் பாடுவதற்கும் உள்ள வித்தியாசமே இசைஞானியின் இசை அந்த அளவிற்கு தனது இசையில் முதல் காதல் அனுபவம் , தொடரும் இனிய தோழமை , தாயின் மடியில் உறங்கும் சுகம் , துன்பத்தை மறக்கடிப்பது, இதயத்தை துடிக்க வைப்பது, இயற்கையான இசையை அறிவு கொண்டு ஆராயமால் அனுபவம் தந்து ரசிக்க வைப்பது என எல்லாவிதமான அனுபவங்களின் ஒட்டுமொத்த இசை வடிவம் தான் இசைஞானி இளையராஜாவின் இசை.
 
கிட்டத்தட்ட 45  ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆளும் அந்த மகா கலைஞனின் இசையை கேட்டு தற்போது வளர்ந்து வரும் வாரிசுகளும்  மெய்சிலிர்த்து போவார்கள். பாமரனுக்கும் இசையின் உன்னதத்தை உணர்த்துவதற்காக இசையின் பழைய மரபுகளைப் பெயர்த்தெறிந்த புரட்சிக்காரர் அவர். 
 
1975- மே 14-ம் தேதி வெளியான அன்னக்கிளி படத்திலிருந்து தமிழ் சினிமா புதிய இசை பாதையில் பயணிக்கத் தொடங்கியது. அன்று தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம், இந்த இசை 45 ஆண்டு காலமாக பிரம்மப்பின் உச்சத்திலேயே நிற்கிறதென்றால் கடவுள் யாருக்கும் கொடுக்காத அந்த ஆசீர்வாத்தை இளையராஜாவிற்கு கொடுத்துள்ளார். தற்போது வளர்ந்து வரும் பல்வேறு இசைக்கலைஞர்கள் கடவுளாக பார்க்கப்படும் ஜாம்பவான் இசைஞானி என்றால் அது மிகையாகாது. 


 
விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற இசை ஜாம்பவான்கள் செய்யாத எதனை இளையராஜா செய்துவிட்டார்? இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் போன்று இரண்டு ஆஸ்கர் விருதுகளை அவர் வாங்கவில்லை.. அனிருத் போன்று ஒரே பாடலில் ஓவர் நைட்டில் ட்ரெண்டாகவில்லை. இவர்களோடு இசைஞானியை ஒப்பிடுவது தவறுதான் என்றாலும், இளையராஜாவை தூக்கி வைத்து கொண்டாடுவதற்கு காரணம்..! அவர் ஆத்மாத்தமான பாடளுக்கு தனது இசையில் உயிர் கொடுத்து உருவாக்குவார். அதனை எக்காலத்தில் கேட்டாலும் அதன் மகிமை கொஞ்சமும் குறையாது.
 
அப்பேற்பட்ட ஜாம்பவானின் இசையை  சினிமா மோகமுள்ள வளர்ந்து வரும் தலைமுறையினர் தங்கள் படங்களில் ரெஃபரன்ஸாகவோ அல்லது பின்னணியிலோ வைக்கின்றனர். அந்தவகையில் சமீபத்தில் வெளியான 96 மற்றும் மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களில் அதிகமாக இளையராஜா பாடல்களும் அவரது பெயரும் பயன்படுத்தப்பட்டது. இது குறித்து இளையராஜா பிரபல யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும் போது "  80களில் , 90களில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன்  நான் இசையமைத்த பாடல்களை வைக்கவேண்டும்?. அந்தப்படத்தின் இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு ஏற்றார்போல ஒரு பாடலை இசையமைக்க முடியாதா?. இது அவர்களின் திறமையின்மை மற்றும் ஆண்மை இல்லாத தனத்தைதான் காட்டுகிறது’ எனக் கடுமையாக சாடினார்.


 
தற்போது இசைஞானியின் இந்த பேச்சிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டங்கள் எழுந்துள்ளது. மேலும் இளையராஜா இசையமைத்த பிதாமகன் படத்தில் சூர்யா மற்றும் சிம்ரன் நடனமாடும் பாடலை சுட்டிக்காட்டி நீங்கள் மட்டும் ஏன் இதில்  பழையப் பாடல்களின் தொகுப்பை பயன்படுத்தியுள்ளீர் இது ஆண்மையில்லாதத்தனம் இல்லையா? எனக் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்