எளிமையான முறையில் காதலரை கரம்பிடித்த டாப்ஸி?

vinoth

செவ்வாய், 26 மார்ச் 2024 (07:08 IST)
பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான “ஆடுகளம்”திரைப்படம் மூலமாக அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

மேலும் சினிமாவில் நிலவும் ஆணாதிக்கம் சம்மந்தமாக தொடர்ந்து பேசியும் வருகிறார். இவர் பேட்மிண்ட்டன் வீரரான மத்தியாஸ் போ என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில் டாப்ஸி நேற்று தன்னுடைய காதலர் மதியாஸ் போவை எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார் என சொல்லப்படுகிறது.  இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதனால் இணையத்தில் கூட திருமணப் புகைப்படங்கள் வெளியாகவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்