பல்கலைகழகத்திற்கு நேருவின் பெயரை நீக்கிவிட்டு மோடி பெயரை சூட்ட வேண்டும் – சொன்னது இவர்தான்!?

ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (12:55 IST)
டெல்லியில் இயங்கி வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் பெயரிலிருந்து நேரு பெய்ரை நீக்கி விட்டு மோடி பெயரை வைக்க வேண்டும் என பாஜக எம்.பி ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வடமேற்கு டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாஜக எம்.பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ். இவர் பாஜகவில் இணைவதற்கு முன்னால் பிரபல பஞ்சாபி பாடகராக இருந்தார்.

இவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது பற்றி பேசினார். நேரு மற்றும் காந்தி ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் வரலாற்று பிழையை செய்துவிட்டதாகவும், அதை தற்போது சரிசெய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் “இந்த பல்கலைகழகம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் முதன்முறையாக வந்திருக்கிறேன். தற்போது பல்கலைகழகத்தில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் என்பதை மாற்றி மோடி நரேந்திரா பல்கலைகழகம் என பெயர் சூட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.

பாஜக எம்.பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்