ஸ்ட்ரோப் எஃபெக்ட்டில் மாடர்ன் உடையில் மிரட்டலான லுக்கில் ஸ்ரேயா!

திங்கள், 9 ஜனவரி 2023 (14:20 IST)
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.

இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராதா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள ஸ்ரேயா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்