பாக்யராஜ் மகன் சாந்துனுவுக்கு ஜோடியாக ‘சித்து பிளஸ் 2’ என்ற படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. இவர் தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் குறிப்பாக வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, வண்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சாந்தினி, தன்னுடன் வில் அம்பு படத்தில் பணியாற்றிய நந்தா என்ற நடன இயக்குனரை காதலித்தார். இவர் மாலைப்பொழுதின் மயக்கத்திலே, வில் அம்பு, பியார் பிரேமா காதல், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். 9 வருடங்களாக காதலித்து வந்த, இவர்கள் இருவரும் தங்கள் காதலை பெற்றோரிடம் சொல்லி திருமணத்துக்கு சம்மதம் கேட்டனர், இவர்களது பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.