பிறந்த நாள் வாழ்த்துக்கள் நடிகை சங்கவி!

திங்கள், 4 அக்டோபர் 2021 (07:05 IST)
கடந்த 90 களில் விஜய் அஜித் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை சங்கவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
தல அஜித் நடித்த முதல் திரைப்படமான அமராவதி என்ற திரைப்படத்தில் தான் நடிகை சங்கவியும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இரண்டாவது படத்திலேயே அவர் விஜய்யுடன் ரசிகன் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் விஜய்யுடன் அவர் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் அந்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று நடிகை சங்கவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
நடிகை சங்கவி வெங்கடேஷ் என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு 2020ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்