தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது, காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில் இப்படப்பின் போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை சமந்தா பகிர்ந்துள்ளார். அதில். எனக்கு மலர்கள் என்றால் அலர்ஜி. நான் சகுந்தலையாக நடித்தபோது, மலர் மாலைகளைப் போட்டுக் கொண்டதால், உடலில் தழும்புகள் ஏற்பட்டன. அவை தெரியாமல் இருக்க மேக்கப் செய்தேன். பின்னர், படப்பிடிப்பின்போது என்னை ஒரு முயல் கடித்துவிட்டது…அதன்பின்னர் அந்த முயல் எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்.