நடிகை சமந்தாவுக்கு ஷூட்டிங்கில் கையில் ரத்த காயம்

செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (16:44 IST)
நடிகை சமந்தாவுக்கு ஷூட்டிங்கின்போது, கையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர், நடிப்பில், சமீபத்தில், காத்து வாக்குல ரெண்டு காதல்,  யசோதா ஆகிய படங்கள் வெளியானது.

இப்படங்களில் வெற்றிக்குப் பின், தன் உடல் நிலை பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்று வந்த சமந்தா, மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது, இந்தியின் வருண் தவானுடன் இணைந்து, சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இதன் ஆக்சன் காட்சிகள் இன்று படமாக்கப்பட்ட நிலையில், இதில், சமந்தாவுக்கு கையில், ரத்தக் காயங்கள் ஏற்பட்டன.

இதுகுறித்த புகைப்படங்களை சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்