விபத்தில் காயமடைந்த நடிகை தன்ஷிகா மருத்துவமனையில் அனுமதி!

சனி, 22 டிசம்பர் 2018 (14:59 IST)
ஷூட்டிங் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்த தன்ஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


 
மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளில் பரீட்சயப்பட்டவர் நடிகை தன்ஷிகா. இவர்  தற்போது 'யோகிடா' என்ற புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனை கெளதம் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். கபாலியில் கவனம் ஈர்த்த யோகி லுக்கில் தான் இந்தப் படத்திலும் நடிக்கிறார் தன்ஷிகா. 
 
ஜட்பத்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இதனை தயாரிக்கிறார்கள். படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானின் இளைய சகோதரி இஸ்ரத்க்வாத்ரி அறிமுகமாகிறார்.
 
எதிராளி பீர் பாட்டிலால் தன்ஷிகாவை தாக்கும்படி எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் எதிர்பாராத விதமாக, தன்ஷிகாவின் கண்ணுக்குக் கீழ் பாட்டில் பட்டு சதை கிழிந்து ரத்தம்  வடிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான படக்குழு அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறது. 
 
தன்ஷிகாவின் இந்த காயம் முழுமையாக குணமான பின்பு அவர் மீண்டும் படபிடிப்பில் கலந்துக் கொள்வார் எனத் தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்