கன்னடத்தில் அறிமுகமாகும் பியா பாஜ்பாய்

வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (20:47 IST)
நிறைய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பியா பாஜ்பாய், கன்னடத்தில் அறிமுகமாக இருக்கிறார்.
‘பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பியா பாஜ்பாய். தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளவர், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் நடித்துள்ளார்.
 
இவர் தற்போது கன்னடத்திலும் அறிமுகமாகிறார். ‘கதேயொண்டு சுருவாகிடே’ என்ற கன்னடப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் பியா. அவருக்கு ஜோடியாக திகந்த் நடிக்கிறார்.

பரம்வா ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் புஷ்காரா மல்லிகார்ஜுன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்