நிக்கி கல்ராணியை திருமணம் செய்யும் தமிழ் திரைப்பட ஹீரோ!

வெள்ளி, 18 மார்ச் 2022 (17:29 IST)
பிரபல நடிகை நிக்கி கல்ராணி பிரபல தமிழ் ஹீரோ ஒருவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
டார்லிங் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிக்கி கல்ராணி தமிழ் தெலுங்கு மலையாளம் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்
 
இந்நிலையில் தன்னுடன் யாகாவாராயினும் நாகாக்க, மரகதநாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஆதியை, நிக்கி கல்ராணி திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் இந்த காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் விரைவில் இவர்களது திருமணம் குறித்த தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
சமீபத்தில் ஆதி நடித்த ‘கிளாப்’ என்ற  திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்