சமந்தா போல அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட அட்டகத்தி நந்தினி!

வியாழன், 20 ஜூலை 2023 (07:05 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.  ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது.

அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். அதன் பின்னர் அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இந்நிலையில் இப்போது தான் பைப்ரோமியால்ஜியா என்ற அரியவகை தசை கோளாறு  நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைகளிலும் மூட்டுகளிலும் கடுமையான வலி இருக்கும் என்றும் சிறிய வேலைகளை செய்வது கூட கடினமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உடல்நல பிரச்சனையால் அவரின் உடல் எடை கடுமையாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சமந்தாவும் இதுபோன்ற ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்