1980 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா என்பதும் அவரது படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். சமீபத்தில் வித்யாசாகர் உடல்நலப் பிரச்சனை காரணமாக காலமானார்.
இந்நிலையில் மீனா, ஒரு பிரபல நடிகரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் அதுபற்றி பதிலளித்துள்ளார். அதில் “ஒரு ஹீரோ தனியாக இருந்தால் இதுபோன்ற வதந்திகள் பரவுவதில்லை. ஆனால் ஒரு ஹீரோயின் தனியாக இருந்தால் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனக்கு மறுமணம் குறித்த எந்த யோசனையும் இல்லை. இப்போது என் மகள் மீதுதான் என் முழு கவனமும் உள்ளது” எனக் கூறியுள்ளார்.