பணம் தரவில்லை என்றால் கேவலமாக பேசுவார்கள்: யூடியூப் சேனல்கள் குறித்து நடிகை மஞ்சிமா மோகன்..!

Mahendran

வெள்ளி, 5 ஜனவரி 2024 (10:19 IST)
யூடியூப் சேனல் வைத்திருக்கும் சிலர் பணம் தரவில்லை என்றால் கேவலமாக பேசுவார்கள் என்று நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது யூடியூப் சேனல்கள் குறித்தும் அந்த சேனல்களை வைத்திருக்கும் சிலர் நடிகர் நடிகைகளை மிரட்டி வருகிறார் என்பது குறித்தும் பரபரப்பாக பேசுகிறார் பேசி உள்ளார்.

யூடியூப் சேனல்கள் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கின்றது என்றும் ஆனால் சிலர் வேலையில்லாமல் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்றும்  மற்றவர்களின் வேலையை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பிறரை பற்றி தவறாக பேசுவது மரியாதை ஏற்ற செயல் என்றும் மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சிலர் யூடியூப் சேனலில் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் வந்த நிலையில் மஞ்சிமா மோகனின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்