தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்று நாட்டாமை. சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நடித்தனர். இதில் மீனாதான் கதாநாயகி என்றாலும் குஷ்பு ஒரு குணச்சித்திர நடிகை போலதான் நடித்திருந்தார்.