தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கிக்கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். திரைப்பிரபலங்கள் கொண்ட பின்னணி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதையடுத்து 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனை பிறகு ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா , தானா சேர்ந்த கூட்டம் உள்ளுட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.