முழுசா சந்திரமுகியாகவே மாறி நிற்கும் கங்கனா… ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம்!

சனி, 4 மார்ச் 2023 (08:43 IST)
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.இந்த இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் ராதிகா, ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில் கதாநாயகி யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சில நாட்கள் ஷூட்டிங்கில் அவர் கலந்துகொண்டார். முதல் பாகத்தில் எப்படி ஜோதிகாவின் நடனம் பேசப்பட்டதோ அதுபோல இந்த படத்திலும் கங்கனாவின் நடனம் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது கங்கனா, சந்திரமுகி மேக்கப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட இணையத்தில் அது கவனம் பெற்றுள்ளது. சந்திரமுகி 2 படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துள்ளது. விரைவில் மொத்த ஷூட்டும் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்