தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார்.
தேர்தலுக்கு முன் இவர்கள் இருவரும் கட்டியணைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால், தேர்ஹ்டல் நடக்கும்போது, இருவரது அணியினரும் சண்டையிட்டுக் கொண்டனர்.
மேலும், நடிகை ஹேமா , பிக்பாஸ் புகழ் நடிகர் சிவபாலாஜியின் கைகளை நடித்ததாக செய்தியாளர்கள் பேட்டியளித்த சிவபாலாஜி, என் கையை ஹேமா நடித்துள்ளார். அவர் ஏன் இப்படி செய்தார் என நீங்களே கேட்க வேண்டும் எனக் கூறினார்.