நடிகை சார்மி தமிழில் 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர். ஆனால் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய அவர் அங்கே முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் நடிப்பில் இருந்து விலகியிருந்த அவர், இப்போது விஜய் தேவாரகொண்டா நடிக்கும் பைட்டர் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்ற செய்திகள் வெளியாக தொடங்கிய நிலையில் அதை மறுத்துள்ளார். என் வாழ்க்கையின் முக்கியமானக் கட்டத்தில் இருக்கிறேன். வாழ்வில் திருமணம் எனும் தவறை செய்யவே மாட்டேன் எனக் கூறியுள்ளார். முன்னதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தோடு காதலில் இருந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.