பிரபல நடிகை அமலாபால் புதுச்சேரியில் போலி ஆவணங்கள் சமர்பித்து சொகுசு காரை பதிவு செய்து, 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அமலாபால் மீது குற்றப்பிரிவு போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து நடிகை அமலா பால் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில் கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாபாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நேற்று மாலை குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அமலாபாலை கைது செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
அதே போல் நஸ்ரியாவின் கணவரான பஹத் பாசில் மற்றும் நடிகரும் எம்.பி யுமான சுரேஷ் கோபி கார் வரி ஏய்ப்பு மோசடி வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.