ஸ்மார்ட் கார்டு இல்லையெனில் ரேஷன் பொருள் கட் - தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளி, 26 ஜனவரி 2018 (11:54 IST)
ஸ்மார்ட் கார்டு இல்லையெனில் வருகிற மார்ச் மாதம் முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 
தமிழகத்தில்  இதுவரை ஒரு கோடியே 85 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பலருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
 
முதலில், ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கே ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்க வேண்டும் என அனைத்து ரேஷன் கடை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி முடிவடையாததால் பிப்ரவரி 28ம் தேதி அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 
 
எனவே, மார்ச் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் உணவு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்