ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை வரவேற்பவர்களும் உண்டு, எதிர்ப்பவர்களும் உண்டு.
அரசியல் தலைவர்கள் அனைவரும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “நல்ல அரசியல் தலைவர் எதிர்ப்பாராத சூழ்நிலையிலும் உடனே முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி. போர் போர் என்று ஒரே அக்கப்போராக உள்ளது” என்று பதிவிட்டார்.
இந்நிலையில் ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்துள்ள கஸ்தூரி “ நானும் ரஜினியின் ரசிகைதான். அவரை நான் அரசியலுக்கு வர வேண்டாம் எனக்கூறவில்லை. ஆனால், இதை முன்பே செய்திருக்க வேண்டும். தற்போது அவர் கட்சி தொடங்கி, அதில் அவர் சிறப்பாக செயல்பட்டு, அவரை பற்றிய ஒரு முடிவுக்கு வரவே இரண்டு தேர்தல் தேவைப்படும். அதற்குள் பத்து வருடம் ஆகிவிடும். மேலும், அவருக்கு பின் யார் என்ற கேள்வியும், குழப்பமும் ஏற்படும். அதனால், அவர் நன்றாக யோசித்து எதுவும் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.