பால்ய பருவ வயதில் நாடகத்தில் நடித்து, பெண் வேடங்களில் நடித்து, 'பராசக்தி'யில் அறிமுகமாகி 300 படங்களுக்கு மேல் நடித்து ,பார் போற்றும் நடிகனாக வளர்ந்த நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த நாள் விழாவை தென்னிந்திய நடிகர் சங்கம் கொண்டாடியது.
தி நகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தின் படிக்கட்டு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜியின் திருவுருவப்படத்திற்கு சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன் தலைமையில் தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிவாஜிக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.
சிவாஜிக்கு மரியாதை செய்த முன்னணி நடிகர்கள் அனைவரும், "சிவாஜியின் நடிப்பால், வசனத்தால் கவரப்பட்டு தான் சினிமாவுக்கு வந்ததாக" மேடைக்கு மேடை சிவாஜியின் புகழ் பாடுகிறவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.