கேலி செய்து மீம்ஸ் போட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழக்கு: தெலுங்கு நடிகர் எச்சரிக்கை

வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:11 IST)
கேலி செய்து மீம்ஸ் போட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழக்கு: தெலுங்கு நடிகர் எச்சரிக்கை
தனது குடும்பத்தினரை பற்றி கேலி செய்து மீம்ஸ் போட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில ஆண்டுகளாக மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தெலுங்கு பிரபல நடிகர் மோகன்பாபுவின் குடும்பத்தினர் குறித்து மீம்ஸ்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
 
சமீபத்தில் மோகன் பாபு நடித்த திரைப்படம் ஒன்று வெளியானதை அடுத்து அந்த படத்தை கேலிசெய்து மீம்ஸ்களும், அவரது குடும்பத்தினரையும் வம்புக்கிழுத்து மீம்ஸ்களும் பதிவு செய்யப்பட்டு வருகிரது.
 
இதனை அடுத்து மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு எங்கள் குடும்பத்தை குறித்து யாராவது தவறாக மீம்ஸ் போட்டால் அவர்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளார் இதனால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்