சின்னதம்பி உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த கேபி பிலிம்ஸ் பாலு அவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது விஷால் தனது மேலாளரை அனுப்பி மறைந்த பாலு சரவணன் தயாரிப்பில் தான் நடிப்பதாக ஒப்புக்கொண்ட பூகை ஸ்டில்ஸை கட்டி நடிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் அவர் காலமானதால் வரும் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து ஆறு மாதத்தில் மொத்த படப்பிடிப்பை முடித்து, அப்படத்தின் மூலம் வரும் லாபத் தொகை அனைத்தையும் மறைந்த தயாரிப்பாளரின் குடும்பத்திற்கே வழங்கவுள்ளதாக விஷால் உறுதியளித்துள்ளார்.