நடிகர் விஷால் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல்: காவல்நிலையத்தில் புகார்

புதன், 28 செப்டம்பர் 2022 (08:14 IST)
நடிகர் விஷால் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானதை அடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் 
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால் என்பதும் இவர் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் விஷாலின் வீடு சென்னை அண்ணா நகரில் இருக்கும் நிலையில் அந்த வீட்டில் நேற்று திடீரென மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது/ இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியதை அடுத்து விஷால் குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் 
 
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் இதனால் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நடிகர் விஷாலின் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்