நடிகர் விக்ரமுக்கு 57 வயது ஆகிய போதிலும் இன்னும் அவர் இளைஞர்போல் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து, டூயட் பாடி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் அதன் ப்ரோமோஷனுக்காக படத்தின் நடிகர், நடிகைகள் மும்முரம் காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்ரம் சம்மந்தப்பட்ட ப்ரோமோஷன் விழாவில், 1 லட்சத்து 29 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்புள்ள சுவிட்சர்லாந்தின் ஹியூப்லோட் என்கிற பிராண்ட் வாட்ச் அணிந்திருந்தார். அதன் விலை பலரையும் மிரளவைத்துள்ளது.