தமிழக அமைச்சர் உதயநிதியிடம் திரையுலக பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சூர்யா மற்றும் கார்த்தி பத்து லட்ச ரூபாய் கொடுத்த நிலையில் அதனை அடுத்து சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து தலா ரூபாய் 10 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளித்தனர்.
அந்த வகையில், திரைப்பட நடிகர் சகோதரர் சூரி மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி-க்கு இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும் என பதிவு செய்துள்ளார்.