நடிகர் சோனு சூட் மத்திய அரசுக்கு கோரிக்கை

செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (21:04 IST)
இந்தியாவில் கொரொனா நோய்த் தொற்றுப் பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பெரும்பாலான மக்கள் தம் வாழ்வாரத்தை இழந்து வீட்டில் முடங்கியுள்ளனர்.

அரசும் தன்னார்வலர்களும், பிரபலங்களும், அரசியல்வாதிகளும்,  சினிமா நட்சத்திரங்களும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா காலத்தில்  வெளிநாட்டில் சிக்கித் தவித்த மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர விமான உதவி,  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் புக் செய்து சொந்த மாநிலம் செல்ல உதவி,  விவசாயிகள், மாணவிகளுக்கு உதவி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என சூப்பர் ஹீரோவாகவும் மனித நேயமுள்ளவராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளவர் நடிகர் சோனுசூட்.

இன்று மட்டும் இவரிடம் 32, 000 பேர் உதவிகள் செய்யும்படி கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தன்னால் முடிந்தவரை எல்லோருக்கும் உதவுவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சோனு சூட், கொரோனா சூழலை கருத்திக் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

மாணவர்களின்  பாதுகாப்பைக்  கருத்தில் கொள்ள வேண்டும்; இந்ஹ்ப்டக் கொரோனா காலத்தில் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்