அந்நிலையில், தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும், அப்படி நடித்தால் நயன்தாராதான் எனக்கு ஜோடி என அவர் பேட்டியளித்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, அவரை கிண்டலடித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை உலவ விட்டனர். ஆனால், அவர் அப்படி கூறவில்லை எனவும், சினிமாவில் நடிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை எனவும் அவரது தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் ராதாரவி “சினிமா, அரசியல் என இப்போது எல்லா துறையிலும் வாரிசுகள் வருகிறார்கள். சரவணா ஸ்டோரில் இருந்தும் வருகிறார்கள். அவர் விளம்பர படத்தில் ஆடும்போதே நினைத்தேன். அவர் விரைவில் சினிமாவிற்கு வருவார்னு. சினிமா கெட்டுப் போய்விட்டது. நான் எதுவும் சொல்ல முடியாது” என அவர் கிண்டலடித்தார்.