நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்: அசம்பாவிதங்களை தவிர்க்க 144 உத்தரவு?

வெள்ளி, 29 அக்டோபர் 2021 (15:03 IST)
நடிகர் புனித் ராஜ்குமார் மரணத்தை தொடர்ந்து பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சற்று முன் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட திரையுலகில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரையுலகிலும் பிரபலமானவர் புனித் ராஜ்குமார். 
 
மறைந்த புனித் ராஜ்குமார் அவர்களுக்கு வயது 46 என்பது குறிப்பிடத்தக்கது புனித் ராஜ்குமார் கன்னட திரை உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு என தென்னிந்திய திரையுலகினர் கருதுதல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்ததால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு, கர்நாடக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்