நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

புதன், 22 பிப்ரவரி 2023 (08:01 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதி கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
நடிகர் பிரபு உடல்நல குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் பிப்ரவரி 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு நேற்று சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
நடிகர் பிரபு சிகிச்சைக்கு பிந்தைய பொதுவான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு இன்னும் ஒரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் நடிகர் பிரபு விரைவில் முழு குளமாகி வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
சமீபத்தில் வெளியான விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் நடிகர் பிரபு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்