பாண்டியராஜனின் மகன் நடிக்கும் காதல் முன்னேற்ற கழகம்

வியாழன், 22 செப்டம்பர் 2016 (16:59 IST)
பாண்டியராஜனின் மகன் பிருத்வி பல படங்களில் நடித்தும் தமிழக மக்களின் மனதில் அவரது முகம் பதியவில்லை. வாரிசாச்சே... அப்படியே விட்டுருவாரா என்ன... இதோ மீண்டும் ஒரு படத்துடன் தமிழக மக்களை சந்திக்க வருகிறார்.


 
 
இந்தப் படத்துக்கு காதல் முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்துள்ளனர். பிருத்வியுடன் சாந்தினி நாயகியாக நடிக்கிறார். ரொமான்டிக் காமெடியாக இந்தப் படம் தயாராகிறது.
 
பாண்டியராஜனின் மகனுக்கு இந்தப் படம் முகவரி தரும் என்று நம்புவோம்.
 
(பேசாம ஆண்பாவத்தை ரீமேக் செய்து பையனை நடிக்க வைக்கலாமே பாண்டியராஜன் சார்...)

வெப்துனியாவைப் படிக்கவும்