அனைவருக்கும் நன்றி.. பிறந்தநாள் அன்று புகைப்படத்தோடு அப்டேட் கொடுத்த மம்மூட்டி!

vinoth

திங்கள், 8 செப்டம்பர் 2025 (10:34 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. 350க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபகாலமாக அவர் கமர்ஷியல் மற்றும் கதையம்சமுள்ள பரிச்சாட்தமான படங்கள் என மாறி மாறி நடித்துக் கவனம் ஈர்த்து வருகிறார். 74 வயதாகும் அவர் தற்போதும் பிஸியான நடிகராக வித்தியாசமானக் கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவருக்குப் பெருங்குடலில் புற்றுநோய் வந்திருப்பதாக தகவல் பரவியது. அதை மம்மூட்டி தரப்பில் யாரும் உறுதிபடுத்தவில்லை என்றாலும் மம்மூட்டிக்கு உடல்நலம் சரியில்லை என்றும் ஆனால் அவர் விரைவிலேயே குணமாகிவிடுவார் என்றும் சக நடிகர்கள் தெரிவித்து வந்தனர். கடந்த ஏழு மாதங்களாக அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது அவர் முழுவதும் குணமாகி மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு கேரள திரையுலகத்தின் முன்னணிக் கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். இந்நிலையில் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்து “அனைவருக்கும் நன்றி. கடவுளுக்கு நன்றி” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்