மம்மூட்டி ஜோதிகா நடிக்கும் காதல் படத்தின் முக்கிய அப்டேட்!

திங்கள், 21 நவம்பர் 2022 (09:08 IST)
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார்.

இநிலையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலையாள சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இதன் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துள்ளார் மம்மூட்டி. இதையடுத்து அவர் படக்குழுவினருக்கு விருந்து வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்