கோடியில் ஒருவன் பட அனுபவத்தை பகிர்ந்த நடிகர் கதிர்!

வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (13:42 IST)
விஜய் ஆண்டனி ,ஆத்மிகா  நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட  கோடியில் ஒருவன் படக்குழு மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.
 
அந்த விழாவில் பட அனுபவங்களை குறித்து பகிர்ந்துகொண்ட நடிகர் கதிர்... 
 
தமிழ் சினிமாவில் திமிருபிடித்தவன் படத்தின் மூலம் எனக்கு அறிமுகம் கொடுத்தவர் விஜய் ஆண்டனி சார் தான். தற்போது கோடியில் ஒருவன் படம் மூலம் ஒரு அங்கீகாரம் கொடுத்தவரும் விஜய் ஆண்டனி சார் தான் . பிச்சைக்காரன் 2 படத்திலும் நான் நடிக்கிறேன் என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்