விஜய்யை திடீரென சந்தித்த கார்த்தி: என்ன காரணம்?

ஞாயிறு, 18 ஜூலை 2021 (18:30 IST)
தளபதி விஜய்யை நடிகர் கார்த்தி சந்தித்ததாக வெளிவந்துள்ள தகவல் கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜாஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் அதே கோகுலம் ஸ்டுடியோவில் கார்த்தி நடித்துவரும் ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து படப்பிடிப்பின் இடைவெளியில் நடிகர் கார்த்தி விஜய்யின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விஜய்யை சந்தித்தார்
 
அப்போது விஜய் கார்த்தியை கட்டிப்பிடித்து வரவேற்றதாகவும் அவரது கெட்டப் சூப்பராக இருப்பதாக வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்பின்னர் தமிழ் திரையுலகம் குறித்து இருவரும் சில நிமிடங்கள் பேசியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய், கார்த்தி சந்திப்பு குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்