தெலுங்கு படமா அப்ப இவ்ளோ சம்பளம்… சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்!

சனி, 17 ஜூலை 2021 (17:04 IST)
சிவகார்த்திகேயன் ஜதி ரத்னாலு படத்தின் இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்றும் அவர் தற்போது அயலான் மற்றும் டாம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்கயிருப்பது பிரபல தெலுங்கு இயக்குனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான தெலுங்கு திரைப்படம் ’ஜாதி ரட்னலு’. இந்த திரைப்படத்தை இயக்கிய அனுதீப்  என்பவர்தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற உள்ளாராம். அதுவும் பணமாக இல்லையாம். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த படத்தின் தமிழக வெளியிட்டு உரிமையைக் கேட்டுள்ளாராம. இதனால் அவர் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட அதிக தொகைக் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்