கார்த்தி இப்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் ஜப்பான் படமும், அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கும் படமும் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.
இதையடுத்து அவர் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்திலும், டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்திலும் அடுத்து நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்போத் WWE வீரர்களுடன் இணைந்து ஒரு தனியார் நிறுவனத்துக்கான விளம்பர படத்தில் நடித்துள்ளார்.