ரஜினியின் மகனாக நடிக்கும் நடிகர் இவர்தான்…

புதன், 5 ஜூலை 2017 (11:53 IST)
‘காலா’ படத்தில், ரஜினியின் மகளாக இவர் நடித்துள்ளார்.




 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ் ரஜினிக்கு மனைவியாக நடிக்க, ஹுமா குரேசி அவருடைய காதலியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தை, தனுஷ் தயாரித்து வருகிறார். மே மாதம் 28ஆம் தேதி மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தில், ‘வத்திக்குச்சி’ படத்தில் அஞ்சலி ஜோடியாக நடித்த திலீபன் நடிக்கிறார். அதுவும், ரஜினிக்கு மகனாக. ரஜினி நடித்துள்ள ‘20’ அடுத்த வருடம் வெளிவர இருப்பதால், ‘காலா’ இந்த வருடமே வெளியாகும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்