வாரிசு படத்திற்கு நடிகர் ஷாம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (16:23 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு . மிகப்பெரும் பட்ஜெட் செலவில் உருவாகிய இப்படம் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. இருந்தாலும் விஜய் படம் என்பதற்காக ஓரளவுக்கு வசூல் ஈட்டியது.
இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் லிஸ்ட் எடுத்தால் பெரிசா போகும். அந்த அளவுக்கு மிகப்பெரிய நசித்திர பட்டாளமே நடித்தது. இந்நிலையில் இப்படத்தில் விஜய்யின் இளைய அண்ணன் அஜய் ராஜேசந்திரன் கதாபாத்திரத்தில் நடிகர் ஷாம் நடித்திருந்தார்.
அதற்காக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம். மார்க்கெட் இல்லாத போதே இவ்வளவு தொகை வழங்கப்பட்டிருப்பது கொஞ்சம் ஓவர் தான்.