இந்நிலையில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு முன்பு முடிவடைந்து டப்பிங், ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். தற்போது ‘காலா’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதுவரை 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைவதை தொடர்ந்து விடுபட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை அடுத்த மாதம்(அக்டோபர்) 6 நாட்கள் தொடர்ச்சியாக சந்திக்க ரஜினிகாந்த் திட்டமிட்டு இருப்பதாகவும், அப்போது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.