நடிகர் ஆனந்த்ராஜின் அம்மா காலமானார்

புதன், 31 அக்டோபர் 2018 (12:30 IST)
தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று அனைத்து முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் நடிகர் ஆனந்தராஜ். தமிழ் மற்றும் தெலுங்கில் இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார். சில வருடங்களாக வில்லனுக்கு பிரேக் கொடுத்து காமெடி ரோல்களில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.
 
இந்நிலையில் புதுச்சேரி திருமுடி நகரில் வசித்துவந்த பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜியின் தாயார் ராஜாமணி ( 77 வயது ) நேற்று  உடல் நலக்குறைவால் காலமானார்.
 
இவருக்கு நடிகர் ஆனந்தராஜ் உள்பட ஐந்து மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இவருடைய உடல் இன்று கருவடிக்குப்பம் சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. திருமுடி நகர் வீட்டில் வைக்கப்படிருந்த அவரது உடலுக்கு, சிவா எம்.எல்.ஏ,, உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
 
தயார் ராஜாமணியின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் பல்வேறு பிரபலங்கள் நடிகர் ஆனந்த் ராஜை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்