அனிதாவின் இழுவை நிறுத்திய சம்யுக்தா: கலாய்த்து ஆஜித்!

வெள்ளி, 30 அக்டோபர் 2020 (08:03 IST)
அனிதாவின் இழுவை நிறுத்திய சம்யுக்தா: கலாய்த்து ஆஜித்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யாரை மிஸ் செய்கிறார்கள் என்பதைப் பற்றி சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் நேற்று கொடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொருவராக வந்து தாங்கள் யாரை மிஸ் செய்கிறோம் என்பதை சுருக்கமாக கூறினார்கள்
 
ஆனால் அனிதா செய்தி வாசிப்பது போல் தனது கதையை நீட்டிக் கொண்டே போனார். ஒரு கட்டத்தில் டாஸ்க் என்ன என்பதையே மறந்து விட்டு அவர் தனது கணவர் குறித்தும், அம்மா குறித்தும் பேசிக்கொண்டே போனார். இடையிடையே அழுகவும் செய்தார்.
 
அனிதாவின் இழுவையான பேச்சை கேட்டு போட்டியாளர்கள் நெளிய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் அனைவரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இந்த நிலையில் ஆஜித், தனது அருகில் உட்கார்ந்திருந்த ரம்யாவிடம் இன்றைய டாஸ்க் பெயர் என்ன என்று கேட்டதும் ரம்யா சிரிப்பை அடக்கமுடியாமல் இருந்ததும் நகைச்சுவையான காட்சிகள் 
 
அதேபோல் ஷிவானியும் பாலாஜியும் அனிதாவின் பேச்சை கலாய்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சம்யுக்தா, ‘அனிதா ரொம்ப லாங்கா போகுது கொஞ்சம் நிறுத்து’ என்று கூறியதும் வேறு வழியின்றி ஸாரி என்று சொல்லிவிட்டு அனிதா தனது பேச்சை நிறுத்தினார் 
 
அனிதாவின் இழுவையான பேச்சை நேற்று ஆஜித் கூட கலாய்த்து விட்டானே என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்