விரைவில் காதல் திருமணம்…அறிவித்த இளம் நடிகர்!

புதன், 23 மார்ச் 2022 (11:57 IST)
மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆதி இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். இதனால் இந்த ஜோடி கவனத்தை ஈர்த்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இருவரும் காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இருவரும் இந்த செய்திகளை மறுக்கவும் இல்லை. இதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இப்போது ஆதி நடிப்பில் உருவாகியுள்ள கிளாப் என்ற திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடாக வெளிவந்துள்ளது. இதையடுத்து ஆதி அளித்த நேர்காணலில் திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் ’விரைவில் காதல் திருமணம் செய்வேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்