நிக்கி கல்ராணி முதலில் நடித்த டார்லிங் ஒரு பேய் படம். படம் ஹிட்டானதால் பேய் படம் என்றால் முதலில் நிக்கி கல்ராணிக்கு போன் அடித்துவிட்டே அடுத்த நடிகையை தேடுகிறார்கள்.
ஆதி நடிக்கும் பேய் படத்தில் நிக்கி கல்ராணிதான் நாயகி.
பேய் ராசியால்தான் கோடம்பாக்கம் பிழைத்துப் போகிறது. வாரத்துக்கு நாலு பேய் படங்கள் கோடம்பாக்கத்தில் தொடங்கப்படுகிறது. ஆனால், ஆதி நடிக்கவிருப்பது வித்தியாசமான சிரிப்பு பேய் படமாம். படத்துக்கு மறக்காத நாணயம் என்று பெயர் வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு ரியாவில் ஐம்பது சதவீத படத்தை சத்தமில்லாமல் முடித்திருக்கிறார்கள்.