ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணையும் கதாநாயகன்,அந்த குரூப்பில் தனது பள்ளிப் பருவ காதலி இருப்பதை அறிந்து, அவளை சந்திக்க அவள் கணவன் இல்லாத நேரத்தில் செல்கிறான்.
புருஸ்லீ ராஜேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஸ்ரிதா சுஜிதரன் நடிக்கிறார். இவர்களுடன் தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ.எம்.விஜயன், கராத்தே ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியுள்ளார் வி.ஆர்.எழுதச்சன். ஒளிப்பதிவு ஆதர்ஷ் பி.அனில், இசை யூ.எஸ்.டீக்ஸ், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
ஐந்து சண்டைக் காட்சிகள், இரண்டு பாடல்களுடன், புருஸ்லீ ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் "ஒரே பேச்சு, ஒரே முடிவு" விரைவில் திரைக்கு வருகிறது!