தமிழ் சினிமா ரசிகர்களின் தலையாய நடிகர் அஜித் கடந்த சில ஆண்டுகாளாகவே எந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கோ, பாராட்டு விழாவிற்கோ, ஏன் தன் நடிப்பில் வெளிவரும் படத்தின் வெற்றி விழாவிற்கு கூட கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.
கலைஞர் பாராட்டு விழாவின் போது நேரடியாக இதை தெரிவித்தார். பொது நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சிகளில் நடிகர்களை வற்புறுத்துகிறார்கள் என்று கூறிய அஜித் அதற்கு பிறகு எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை.