இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு திடீர் மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் எடிட்டராக பிரசன்னா ஜி.கே. ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென பிரசன்னாவுக்குப் பதிலாக பிரவீன் கே.எல். எடிட்டராக நியமிக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. எடிட்டர் பிரவீன் கே.எல் ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்பட பல படங்களை எடிட் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து படக்குழுவினர் தெரிவிக்கவில்லை.
சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, ஜெகபதிபாபு, இளவரசு, பாலாசிங், ராம்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது